வெயிட்டிங்கில் முரசொலி விவகாரம்..! முன்ஜாமீன் எடுத்துக் கொள்வது ஸ்டாலினுக்கு நல்லது…!

23 May 2020, 10:02 pm
H.RAJA-UPDATENEWS360
Quick Share

சிவகங்கை: ஸ்டாலின் முன் ஜாமீன் எடுத்து வைத்துக்கொண்டால் நல்லது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது: ஸ்டாலினுக்கு பட்டியல் சமூகத்தின் மீது நவீன தீண்டாமை உள்ளது.

திமுக தமிழகத்தை பிடித்த கொரோனா வைரஸ். இதை முழுமையாக அழித்து ஒழிக்காமல், தமிழகத்தில் எந்த சமுதாயமும் மரியாதையாக நடமாட முடியாது.

அவ்வளவு மோசமான தீயசக்திகள். பட்டியல் சமூகத்தைப் பற்றி ஆர்.எஸ். பாரதி பேசியதாக நான் நினைக்கவில்லை. திமுக, திக, நீதிக்கட்சியின் மரபணுவில் பட்டியல் சமூகத்தின் விரோதப் போக்கு இருக்கிறது.

தயாநிதிமாறன், ஆர்.எஸ். பாரதி இருவரையும் குண்டாசில் கைது செய்ய வேண்டும். திமுகவின் ஒன்றிணைவோம் வா என்பது ஒரு பப்ளிசிட்டி. பிரதமரை பற்றி அவதூறு பேசினால் அவர்களுக்கு புரியும் பாஷையில் அதே மாதிரி திருப்பி அடிப்போம்.

சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை மக்கள் பார்த்துக் கொண்டுள்ளனர். நல்ல முடிவு விரைவில் எடுப்பார்கள் என்றார்.

Leave a Reply