ஹெச்.ராஜா முன் ஜாமீன் மனு தள்ளுபடி : 23ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு!!!

19 July 2021, 7:19 pm
H Raja - Updatenews360
Quick Share

ஹெச்.ராஜா முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு திருமயம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கோவில் நிகழ்ச்சியில் கொண்ட ஹெச்.ராஜா மேடை அமைப்பது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது. அப்போது உயர்நீதிமன்றத்தையும், காவல்துறையினரையும் தவறான முறையில் பேசியதற்காக திருமயம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் திருமயம் கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக கீழமை நீதிமன்றம் ஜுலை 23-ஆம் தேதி ஹெச்.ராஜா ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளது.

இந்நிலையில், ஹெச்.ராஜா முன் ஜாமீன் கேட்டுமனு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கீழமை நீதிமன்றம் சம்மன் தான் அனுப்பியுள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

Views: - 66

0

0