நாகை அருகே மூன்று வயது குழந்தையின் இரைப்பையில் சிக்கிய கிளிப்பை அறுவை சிகிச்சை இன்றி 10 நிமிடத்தில் வெளியே எடுத்து மருத்துவர் சாதனை படைத்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன் – கீதா தம்பதியினர். தமிழரசன் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சஞ்சனா என்கிற 3 வயது குழந்தை உள்ளது.
இந்த நிலையில், நேற்று மதியம் குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் போது, தான் அணிந்திருந்த ஹேர் கிளிப் ஒன்றை வாயில் வைத்து கடித்துக் கொண்டிருந்த நிலையில், அந்த ஹேர் கிளிப்பை குழந்தை விழுங்கியுள்ளது. இதனையடுத்து ,சிறிது நேரத்தில் குழந்தை வாந்தி எடுத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, உடனடியாக வீட்டிற்கு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் எக்ஸ் ரே எடுக்குமாறு கூறியுள்ளார். எக்ஸ் ரே எடுத்து பார்த்தபோது, இரைப்பையில் ஹேர் கிளிப் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, திருவாரூர் ஜவுளிக் காரத் தெருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அங்குள்ள மருத்துவர் பரிந்துரை செய்துள்ளார். பெற்றோர்கள் அங்கு குழந்தையை அனுமதித்துள்ளனர்.
இதனையடுத்து, தனியார் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் சுந்தர் என்பவர் குழந்தையை பரிசோதித்து விட்டு மயக்க மருந்து நிபுணர் மருத்துவர் ஸ்டாலின் உதவியுடன், அறுவை சிகிச்சையின்றி என்டோஸ் கோபி மூலம் குழந்தைக்கு எந்த வித பாதிப்பும் இன்றி குழந்தையின் இரைப்பையில் உள்ள ஹேர் கிளிப்பை பத்து நிமிடங்களில் அகற்றியுள்ளார்.
ராஜமௌலி-மகேஷ் பாபு கூட்டணி இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் எஸ் எஸ் ராஜமௌலி. தெலுங்கில் பல திரைப்படங்களை…
வாடகைக்கு ஆட்களைப் பிடித்து, திமுக புகழ் பாடச் சொன்னால் மட்டும் போதாது செயலிலும் இருக்க வேண்டும் என திமுக அரசை…
வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. தனுஷ் தனது…
டிரெண்டிங் இசையமைப்பாளர் தமிழ் சினிமா உலகில் தற்போது டிரெண்டிங் இசையமைப்பாளராக வலம் வருபவர் சாய் அப்யங்கர். “கட்சி சேர” என்ற…
மடப்புரத்தில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்த…
திரிஷ்யம் படத்தின் ரீமேக் 2013 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியான திரைப்படம்…
This website uses cookies.