திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே மாவூத்தன்பட்டியில் மாற்றுத்திறனாளியை அடித்து சித்திரவதை, செய்யும் கொடூர பெண் குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா, கொடைரோடு அருகே அமையநாயக்கனூர் பேருராட்சியின் 10வது வார்டு பகுதி, மாவூத்தன் பட்டியாகும். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சந்திரா, இவரது கணவரின் அண்ணன் மகன், மணிகண்டன் என்பவர் மாற்றுத்திறனாளி. 35 வயது மதிக்கத்தக்க, மாற்று திறனாளி மணிகண்டனால் பேசமுடியாது. நடக்க முடியாது.
காப்பகத்தில் பாதுகாப்பாக இருந்த மணிகண்டனை அழைத்து வந்த சந்திரா, அவர் வாங்கும் மாதந்திர உதவித் தொகைக்காகவும், மணிகண்டன் பெயரில் உள்ள காலி இடத்தை அபகரிக்கவும், திட்டமிட்ட சந்திரா மணிகண்டனை தினந்தோறும், குச்சியால் அடித்து சித்திரவதை செய்து வருகின்றார்.
இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த இந்து முன்னனி இளைஞர்கள், இந்த சம்பவம் தொடர்பாக அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்திற்கு, வீடியோவுடன் தகவல் கொடுத்துள்ளனர். மேலும் இந்த வீடியோ வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொடைரோடு அருகே மாவூத்தன்பட்டியில் மாற்றுத்திறளாளியை அடித்து சித்திரவதை செய்யும் கொடூர பெண் குறித்த வீடியோ வெளியானது, குறித்து இப்பகுதியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மனிதநேயம் மரத்து போனதற்கு இந்த நிகழ்வு சாட்சியாக உள்ளது. இது குறித்து அம்மையநாயக்கனூர் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை எடுக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.