கோவை மக்களுக்கு “ஹேப்பி நியூஸ்“ : பாதிப்பும் குறைவு, பலி எண்ணிக்கை சுத்தமா இல்ல!!

9 November 2020, 7:30 pm
Cbe Corona - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் இன்று புதிதாக 189 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட பட்டியலில் கோவையில் ஊரகம், நகர்ப்புற பகுதிகளை சேர்ந்த 189 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 287 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா நோய்த் தொற்று பாதிப்பால் கோவையில் இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களுக்கு பின் தினசரி கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200க்கு கீழ் குறைந்துள்ளது. மேலும் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு குறைய வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 179 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். கோவையில் இதுவரை 43 ஆயிரத்து 711 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 1000 பேர் சிகிச்சையில் உள்ளனர்

Views: - 19

0

0