“நான் தனியாள் இல்ல“ : இரு காட்டு யானைகளுடன் ஜோடி சேர்ந்ததால் பாகுபலி யானைக்கு ரேடியோ காலர் பொருத்துவதில் சிக்கல்!!

8 July 2021, 11:29 am
bahubali Elephant - Updatenews360
Quick Share

கோவை : விவசாயிகளை அச்சுறுத்தி வரும் பாகுபலி யானையுடன் மேலும இரு யானைகள் ஜோடி சேர்ந்துள்ளதால ரேடியோ காலர் பொருத்தும் பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதிகளில் கடந்த ஓராண்டாக விவசாய நிலங்களுக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வந்த ஒற்றை ஆண் காட்டு யானை பாகுபலியை கண்காணித்து அதனை விளைநிலங்களுக்கு நுழையாத வகையில் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் வனத்துறை சார்பில் பாகுபலி யானையை கண்காணிக்க அதன் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்த முடிவு செய்தனர். இதற்காக பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் இருந்து மாரியப்பன், கலீம் வெங்கடேஷ் ஆகிய 3 கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து வனத்துறை சார்பில் பாகுபலி எனக்கு ரேடியோ காலர் பொருத்தும் பணி கடந்த மாதம் 27 ஆம் தேதி துவங்கியது. இதில் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்தது.

இதனைத்தொடர்ந்து ரேடியோ காலர் பொருத்தும் பணி பத்து நாட்களாக தொடர்ந்து வந்த நிலையில் யானை சிக்காததால் ரேடியோ காலர் பொருத்தும் பணியை ஒத்திவைத்தனர்.

அவ்வப்போது மேட்டுப்பாளையம் உதகை சாலையில் ஒற்றை ஆண் காட்டு யானையாக உலாவந்த பாகுபலி யானை தற்போது அந்த யானை அதன் கூட்டாளிகள் மேலும் இரு ஆண் காட்டு யானைகள் நேற்று மாலை மேட்டுப்பாளையம் உதவி சாலையை கடந்தது.

இந்நிலையில் பாகுபலி யானைக்கு ரேடியோ காலர் பொருத்தும் பணி மேலும் சில நாட்கள் தள்ளிப் போகலாம் என தெரியவருகிறது.

Views: - 130

0

0