உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டுவிட்டதா? : சைபர் கிரைம் போலீசாரின் அறிவுரை..!

9 July 2021, 12:44 pm
OTP Police Advice 1 - Updatenews360
Quick Share

கோவை : வங்கிக் கணக்கிலிருந்து மர்மநபர்கள் பணத்தை கொள்ளை அடித்துவிட்டால் அந்த பணத்தை முடக்கும் வகையில் புகார் அளிக்க பிரத்தியேக தொலைபேசி எண்ணை சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ளனர்

இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது : ஓ.டி.பி மூலமாகவோ வேறு வகையிலோ உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து மோசடியாக பணம் எடுக்கப்பட்டு விட்டதா? பதட்டப்படாதீர்கள் உடனடியாக 155260 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுங்கள்.

உங்களது வங்கியிலிருந்து எடுக்கப்பட்டு மோசடி நபர்களின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்பட்ட பணம் அவர்கள் அதை வெளியே எடுக்காதவாறு முடக்கப்படும். இதற்கான சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு சைபர் கிரைம் போலீசார் அறிவித்துள்ளனர்.

Views: - 150

1

0