சினிமா துறையில் அண்மைக்காலமாக சில நடிகைகளை கூறுகையில் அட்ஜெஸ்ட்மென்ட் இருந்தால் மட்டுமே நடிக்க அழைக்கிறார்கள். தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என இரவு தங்கும் நாட்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது என பலர் இந்த பிரச்சினை குறித்து பேசி வருகிறார்கள்.
இந்த பாலியல் வக்கிரம் தற்போது பள்ளி வரை வந்துவிட்டது. மார்க் வேண்டுமானால் தனியே டியூஷன் வர வேண்டும், தனியே ஸ்டாஃப் ரூமுக்கு வர வேண்டும் என்றெல்லாம் மாணவிகளை கட்டாயப்படுத்தும் சம்பவங்கள் நடைபெறுவதாக புகார்கள் வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிலையில் நடிகை ரேகா நாயர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் சர்ச்சைக்குரிய தகவல்களை அளித்துள்ளார். அவரை நடிகை ஷகிலா பேட்டி எடுத்தார்.
ரேகா நாயர் கூறுகையில், ஒருவர் தம்மிடம் வந்து வழிந்து கொண்டு பேசினாலே அவர் ஏன் வழிகிறார், அதன் நோக்கம் என்ன? அவர் நம்மிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார் என்பதை நன்றாக யூகித்துவிடுவோம்.
இது கூட தெரியாத விரல் சூப்பும் பிள்ளைகள் நாம் அல்ல. அப்படியிருக்கும் போது ஒரு படத்தை நடித்துவிட்டு 10 ஆண்டுகள் கழித்து அந்த இயக்குநர் என்னை அங்க தொட்டாரு, இங்க தொட்டாரு என புகார் கூறுவதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.
அப்படி என்றால் 10 ஆண்டுகளாக இந்த பெண்கள் மறுப்பேதும் சொல்லாமல் உல்லாசத்தை என்ஜாய் செய்தார்கல் என்றுதானே அர்த்தம்.
ஆண்கள் பணம் கொடுக்கிறார்கள் என புகார் கொடுக்கறீங்களே, அவர்கள் பணம் கொடுக்கும் போது அதை என்ஜாய் செய்கிறீர்களே. இதுவரை எந்த டைரக்டரும் என்னை அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு வா என அழைத்ததில்லை.
ஒரு இயக்குநரோ அல்லது ஒரு நடிகையோ உடலுறவு கொள்கிறார்கள் என்றால் இருவரும் விரும்பியே நடக்கிறது. இதை தாண்டி எந்த இயக்குநரும் நீ படுத்தால்தான் ஷூட்டிங் என யாரும் சொன்னது கிடையாது என ரேகா நாயர் தெரிவித்துள்ளார்.
பிரபல பின்னணி பாடகி தொடங்கி பல பெண்கள் மீ டூ என்ற ஹேஷ்டேக் மூலம் தங்கள் துறையில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது குறித்து புகார்களை தெரிவித்தனர்.
ஒரு படத்தில் வாய்ப்பை பெற தன்னுடன் படுக்கையை பகிர வேண்டும் என சில ஆண்கள் கேட்பதால் பெண்கள் தாங்கள் விரும்பிய துறையில் இருந்து வெளியேற முடியாமலும் இந்த பாலியல் தொல்லைகளுக்கு பகிரங்கமாக மறுப்பு தெரிவிக்க இயலாமலும் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக பல நடிகைகள் புகார்களை கூறி வரும் நிலையில் ஆண்கள் மீதே தவறில்லை என்பது போல் ரேகா நாயர் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.