கொடைக்கானல் போக PLAN போட்டிருக்கீங்களா? இதையும் கொஞ்சம் கவனிங்க!!!

Author: Udayachandran
24 July 2021, 4:35 pm
Kodai Traffic -Updatenews360
Quick Share

திண்டுக்கல் : கொடைக்கானலில் வார விடுமுறையை ஒட்டி குவிந்த சுற்றுலா பயணிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கானலில் ஊர‌ட‌ங்கு த‌ள‌ர்வு அறிவிக்க‌ப‌ட்ட‌தில் இருந்து சுற்றுலா ப‌ய‌ணிக‌ள் வ‌ருகை புரிந்து வ‌ருகின்ற‌ன‌ர். போதாகுறைக்கு இன்றும் நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

தொட‌ர்ந்து வார‌ விடுமுறையை முன்னிட்டு கொடைக்கான‌லில் சுற்றுலா ப‌ய‌ணிக‌ள் வ‌ருகை அதிக‌ரித்துள்ள‌து. இத‌னால் வெள்ளி நீர் வீழ்ச்சி , அண்ணாசாலை , ஏரிசாலை , கலைய‌ர‌ங்க‌ம் ப‌குதி , நாயுடுபுர‌ம் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு ப‌குதிக‌ளில் வாக‌ன‌ நெரிச‌ல் ஏற்ப‌ட்டு வெகு தூர‌ம் வாக‌ன‌ங்க‌ள் அணிவ‌குத்து செல்கிற‌து.

மேலும் சுற்றுலா இட‌ங்க‌ள் அனைத்தும் மூட‌ப்ப‌ட்டுள்ள‌தால் சுற்றுலா ப‌ய‌ணிக‌ள் ஏமாற்ற‌ம் அடைந்துள்ள‌ன‌ர். இருப்பினும் நீரோடை மற்றும் ரம்மியமான இயற்கை காட்சியை காண சுற்றுலா பயணிகள் வருகையால் வியாபாரிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

Views: - 188

1

0