பஞ்சமி நிலம் விவகாரம் : ஆர்.எஸ்.பாரதிக்கு உயர்நீதிமன்றம் ‘குட்டு‘!

10 September 2020, 6:06 pm
RS Bharathi - updatenews360
Quick Share

திமுக தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரிய பாமக நிறுவனர் ராமதாஸ் மனுவுக்கு பதிலளிக்க ஆர்எஸ் பாரதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

“அசுரன்“ படம் பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின், பஞ்சமி நிலம் குறித்து விமர்சனம் செய்திருந்தார். பஞ்சமி நிலம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பல்வேறு சந்தேககங்களை எழுப்பினார். மேலும் பஞ்சமி நிலத்தில்தான் முரசொலி அறக்கட்டளை அலுவலகம் செயல்பட்டு வருவதாக ராமதாஸ் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

தவளை தன் வாயால் கெடும் என்பது போல பஞ்சமி நிலத்தில்தான் அலுவலகம் செயல்பட்டு வருவதாக ஸ்டாலின் கூறியது பேச்சுப்பொருளாக மாறியது.

அப்போது முரசொலி அறக்கட்டளை அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இல்லை என்பதற்கு ஆதாரம் உள்ளதாக கூறிய அறக்கட்டளையின் நிர்வாக அறங்கவாலர் ஆர்எஸ் பாரதி, பாமக நிறுவனர் ராமதாஸ் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தாக்க செய்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே ஆர்எஸ் பாரதிக்கு நோட்டீஸ் அனுப்பபட்டிருந்தது.

இந்தநிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது முரசொலி அறக்கட்டளை சார்பில் யாரும் ஆஜராகததால் மீண்டும் ஆர்எஸ் பாரதிக்கு நோட்டீஸ் அனுப்ப அறிவுறுத்திய் நீதிபதி, விசாரணையை அக்டோபர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Views: - 6

0

0