Categories: தமிழகம்

இதிகாசங்கள் பற்றி பேச அவருக்கு தகுதியில்லை : திருமாவளவனை சீண்டும் எல்.முருகன்

புதுச்சேரி : இந்திய இலங்கை இருநாட்டு மீனவர் விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் நடத்தப்பட்டு தீர்வு காணப்படும் என்றும், மீனவர் நலனில் மத்திய அரசு மிகுந்ர அக்கரையுடன் செயல்படுவதாகவும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மத்திய அமைச்சர் எல்.முருகன் பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்டு வருகின்றோம், 2014 க்கு பிறகு துப்பாக்கிச்சூடு போன்ற எந்த சம்பவமும் இதுவரை நடைபெறவில்லை, அந்த அளவிற்கு தமிழக மீனவர்களை மத்திய அரசு பாதுகாத்து வருகின்றது என கூறிய அவர், 70 ஆண்டுகளில் முதன் முறையாக  மீனவர்களுக்கு ஒரு தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது மட்டுமல்லாமல் இந்த பட்ஜெட்டில் 70% கூடுதல் நிதி மீனவர்களின் நலனுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்,

இந்திய இலங்கை இருநாட்டு மீனவர் விவகாரம் தொடர்பாக மீண்டும் சுமூக பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்று முருகன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தபோது, இது ஒரு ஜனநாயக நாடு எந்த சமூகத்தை சேர்ந்தவர்களும் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம். தீண்டாமையை கடைபிடிக்க மாட்டேன் என உறுதிமொழி எடுத்தவர்கள் தான் பாஜகவின் உறுப்பினர்களாக உள்ளனர் என்றும் திருமாவளவன் மிகுந்த பயத்தில் உள்ளார். 

நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என முயற்சிக்கிறார் என குற்றஞ்சாட்டியவர். பிறமாநிலங்களில் பட்டியலினத்தனர் நிதித்துறை போன்று முக்கிய இலாக்கா ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் தமிழகத்தில் பட்டியலினத்தை சேர்ந்த அமைச்சர் கடைசி பட்டியலில் உள்ளார் அதை திருமாவளவன் எதிர்த்து கேட்டிருக்க வேண்டும், ராமாயணமும், மகாபாரதமும் நம் நாட்டின் இதிகாசங்கள் அதைப்பற்றி பேச திருமாவளவனுக்கு தகுதியில்லை என்றவர்,

இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒரு தேசிய நூலான பகவத்கீதை தான் அந்த இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வணங்கிவிட்டுத்தான் மோடி பிரதமராக பதவி ஏற்றுள்ளார் என திருமாவளன் புதுச்சேரியில் நேற்று பேசியதற்கு பதிலளித்த முருகன்,புதுச்சேரியில் பிரதமரின் வழிகாட்டுதலின்படி பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது என்றும், தென் இந்தியாவில் முதன்முறையாக புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருவது பெருமை சேர்க்கிறது என்று தெரிவித்துள்ளார்.

KavinKumar

Recent Posts

திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…

17 minutes ago

சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?

கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…

26 minutes ago

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

1 hour ago

ரயிலில் பயணம் செய்பவர்களே… அமலுக்கு வந்தது புதிய விதிமுறைகள் : முழு விபரம்!

ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…

2 hours ago

சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…

நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…

3 hours ago

ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே

பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…

4 hours ago

This website uses cookies.