தூய்மைப் பணியாளரை கவுரவித்த தலைமை ஆசிரியர்: தேசியக் கொடியேற்ற வைத்து நெகிழ்ச்சி..!!

Author: Aarthi Sivakumar
16 August 2021, 1:59 pm
Quick Share

சிவகங்கை: மானாமதுரை அருகே அரசு உயர் நிலைப்பள்ளியில் பெண் தூய்மைப் பணியாளரை தேசிய கொடி ஏற்ற வைத்து பள்ளி தலைமை ஆசிரியர் கௌரவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

75ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆங்காங்கே தேசிய கொடி ஏற்றினர்.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கல்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சேவியர் ஆரோக்கியதாஸ் வயதில் மூத்த தூய்மைப் பணியாளர் லட்சுமி என்பவரை அழைத்து தேசிய கொடியேற்ற வைத்து கவுரவப்படுத்தினார்.

கல்குறிச்சி கிராமத்தில் அரசு உயர் நிலைபள்ளியில் 75ஆவது சுந்திரதினம் நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது, அந்த ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும் கவரபடுத்தும் விதமாக அனைவரும் வரவேற்கப்பட்டனர். அப்போது தூய்மைப் பணியாளர் லட்சுமி கொடியேற்றினார்.

இதனையடுத்து, அரிமா சங்க நிர்வாகிகள் துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் இனிப்பு மற்றும் சேலைகள் வழங்கினர். கொரோனா காலத்தில் தன்னலம் பாராமல் தூய்மைப் தொழிலாளர்கள் ஆற்றிய பணியை கவுரவித்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 298

0

0