ரயில்வே தண்டவாளம் அருகே உடல் இல்லாமல் இருந்த தலை.! ஜாமீனில் வந்தவர் கொடூரக் கொலை!!

16 August 2020, 2:16 pm
thiriuvallur Murder - Updatenews360
Quick Share

திருவள்ளூர் : கடந்த 2019ஆம் ஆண்டு 3 மாணவர்கள் கொலை செய்யப்ப்டட வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி ஜாமீனில் வெளிவந்த நிலையில் அவரை மர்ம கும்பல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ம.பொ.சி., நகரைச் சேர்ந்த பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் ஆகாஷ் (வயது 18) விமல் (வயது 23) திருவொற்றியூரைச் சேர்ந்த சதீஷ் (வயது 24) ஆகிய மூன்று பேரும் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஓட ஓட கொடூரமாக கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய ஆத்துபாக்கத்தை சேர்ந்த மாதவன் என்பவர் சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த நிலையில் கொடூரமாக அவரின் தலையை வெட்டி கொலை செய்த மர்ம கும்பல் தலையை கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே உணவகம் முன்பாக போட்டுவிட்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் மற்றும் ரயில்வே போலீஸார் தலையை மீட்டு உடலை தேடிய நிலையில் புது கும்மிடிப்பூண்டி பகுதியில் தைலம் தோப்பில் தலையில்லாத உடல் கால்கள் வெட்டப்பட்ட நிலையில் இருப்பதை கண்டறிந்தனர்.

கொடூரமாக மாதவன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் முன்விரோதம் காரணமாக நடைபெற்று இருக்கலாம் என்றும் ஏற்கனவே அவர் மீது 3 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவரை அவரது எதிரிகள் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற இந்த கொடூர கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில் நிலையம் மற்றும் புது கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு கொலை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். மாதவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்

Views: - 26

0

0