உள்ளாடையுடன் ஊர்வலம்.. தலைமை ஆசிரியரின் லீலை…மாணவி வைத்த டுவிஸ்ட்!!
Author: Udayachandran RadhaKrishnan8 August 2024, 4:32 pm
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே எருமனூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் இவரது மகள் சக்திதேவி கடந்த 2023- 2024ம் ஆண்டு எருமனூர் கிராமத்தில் உள்ள விஇடி தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு முடித்துள்ளார்
இந்த நிலையில் அந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக கடலூர் பகுதியைச் சேர்ந்த எடில்பெர்ட் பெலிக்ஸ் கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார்
இந்த நிலையில் அந்த மாணவி படிக்கும் பொழுது தலைமையாசிரியர் அந்த மாணவிக்கு உடற்கல்வி அறையில் வைத்து முத்தம் கொடுத்துள்ளார்
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி உள்ளது மற்றும் மாணவியின் பெற்றோருக்கும் தெரியவந்துள்ளது.
இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று மாலை பள்ளி முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்ற தலைமை ஆசிரியர் காரை வழிமறித்து தனது பிள்ளையிடம் தகாத முறையில் இருந்ததை கண்டித்து அவரை சரமாரி தாக்கி அரை நிர்வாணமாக ஜட்டியோடு அடித்து இழுத்துச் சென்றுள்ளனர்
இதனை அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தலைமை ஆசிரியர் எடில் பெர்ட்பெலிக்ஸ் மீட்டுள்ளனர்
பின்னர் உறவினர்கள் தலைமையாசிரியர் மற்றும் இதற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் பள்ளியின் முன்பு விருத்தாசலம் – முகாசாபரூர் செல்லும் கிராமப்புற சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்
பின்னர் அந்த மாணவி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தலைமை ஆசிரியரும் நானும் காதலிக்கிறோம் நீங்கள் ஏன் சாலை மறியல் செய்கிறீர்கள் என்று கூறியதால் அப்பகுதியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது பின்னர் போலீசார் சமாதானம் செய்து சாலை மறியலை கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் இது குறித்து மாணவியின் பெற்றோர் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து போக்சோவில் தலைமை ஆசிரியரை கைது செய்தனர்.
0
0