முன்களப்பணியாளருக்கே இப்படி ஒரு சோதனையா : ஊரடங்கை மீறியதாக சுகாதார ஆய்வாளருக்கு அபராதம்!!

18 May 2021, 11:57 am
Spot Fine - Updatenews360
Quick Share

விருதுநகர் : சிவகாசியில் ஊரடங்கு மீறி வெளியே வந்ததாக கூறி சுகாதார ஆய்வாளருக்கு காவல்துறை அபராதம் விதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி ஆலமரத்துப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுகாதார ஆய்வாளராக விக்னேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார்.

விக்னேஷ் நேற்று பணி நிமித்தமாக மார்க்கெட் சாலையில் சென்றபோது அவரை தடுத்து நிறுத்திய காவல்துறை ஊரடங்கு மீறி வெளியே வந்ததாக கூறி 500 ரூபாய் அபராதமும், தலைக்கவசம் அணியாததால் 100 ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர்.

தான் சுகாதார ஆய்வாளர் எனவும் சுகாதார பணி மேற்கொள்வதற்காக செல்வதாக தெரிவித்தும் காவல்துறையினர் அத்துமீறி நடந்து கொண்டதாக சுகாதார ஆய்வாளர் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் முன் களப்பணியாளர்கள் காவல்துறையினர் இது போன்ற மன உளைச்சலுக்கு உள்ளாக்கி உள்ளது பொதுமக்கள் மத்தியிலும் சக முன் களப்பணியாளர்கள் மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அபராதம் விதித்த சிவகாசி நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பால முரளி கிருஷ்ணன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Views: - 163

0

0