‘இன்னைக்கும் கனமழைக்கு வாய்ப்பிருக்கு’: 8 மாவட்டங்களுக்கு அலர்ட்…வானிலை மையம் அறிவிப்பு..!!

Author: Aarthi Sivakumar
24 October 2021, 1:15 pm
Quick Share

சென்னை: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டில் கனமழை பெய்யும். புதுகோட்டை, டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 10, பெரியாறு, சின்னக்கல்லாறு பகுதிகளில் தலா 7 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

Rain- Updatenews360

திருவண்ணாமலை, அமராவதி அணை தலா 6, தாராபுரம், கீழ்பெண்ணாத்தூர், கொடைக்கானலில் தலா 5. செ.மீ மழை பதிவாகி உள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Views: - 382

0

0