தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை அலர்ட்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

Author: Aarthi Sivakumar
22 August 2021, 9:41 am
Quick Share

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.

கடலுார், சென்னை, காஞ்சிபுரம், வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, தென்காசி, திண்டுக்கல், மதுரை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலுார், ராணிப்பேட்டை, திருவள்ளூர், நீலகிரி, கோவை, கரூர், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். அவ்வப்போது கன மழையும் பெய்யலாம் என தெரிவித்துள்ளார்.

இன்று முதல் 25ம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 – 50 கி.மீ., வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 218

0

0