வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: டெல்டா மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் கனமழை அலர்ட்…!!

Author: Aarthi Sivakumar
14 August 2021, 11:20 am
Quick Share

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செய்திக்குறிப்பு, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் கடலுார் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்.

சென்னையில் இன்று சில இடங்களில் மிதமான மழை பெய்யும். நாளை முதல் இரண்டு நாட்களுக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Views: - 217

0

0