மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!!

12 July 2021, 10:05 am
Quick Share

சென்னை: நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்க கடல், வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அதேநேரம், தமிழக பகுதிகளில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

chennai metrology - updatenews360

இதன் காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். நாளை நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கன மழை பெய்யும். கோவை, தேனி மாவட்டங்களில் கன மழை பெய்யும்.

தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் முதல் மூன்று நாட்களுக்கு நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன மழை பெய்யும். சென்னையில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

Rain - Updatenews360

குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளில் நாளை வரை மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். தென்மேற்கு, மத்திய மேற்கு அரபி கடல் பகுதிகளில் வரும், 15ம் தேதி வரை மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 95

0

0