சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை: போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகன ஓட்டிகள்..!!

Author: Aarthi Sivakumar
5 October 2021, 9:37 am
Quick Share

சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்து வருவதால் அலுவலகம் மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்வோர் சிரமத்தை சந்தித்துள்ளனர்.

Image

தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையின் ஒருசில பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடிமின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூட்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.

மேலும், டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

Image

கிண்டி, சைதாப்பேட்டை, சேத்துப்பட்டு, எழுப்பூர், சென்ட்ரல், பிராட்வே உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால், அலுவலகம் செல்வபர்கள், வாகன ஓட்டிகள் சற்று சிரமத்தை சந்தித்து வந்துள்ளனர். மழை காரணமாக நகரின் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது.

சாலைகளில் இருந்த குழிகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Views: - 418

0

0