கார்த்திகை பிறந்ததும் உச்சம் தொட்ட பூக்களின் விலை ; தொடர் கனமழையால் வாசமில்லாமல் போகும் மலர்கள்..!!

Author: Babu Lakshmanan
17 November 2021, 4:40 pm
Quick Share

கன்னியாகுமரி: கனமழை காரணமாக பூக்களின் வரத்து குறைந்துள்ள நிலையில், கார்த்திகை மாதம் பிறந்ததால் தேவையும் அதிகரித்து இருக்கும் காரணத்தால், கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை 5 மடங்கு உயர்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற மலர் சந்தையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரள மாநிலத்திற்கு பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இதனிடையே கனமழை காரணமாகவும், பனிப்பொழிவு காரணமாகவும் பூக்களின் வரத்து ஐந்தில் ஒரு பங்காக குறைந்துள்ள நிலையில், தற்போது கார்த்திகை மாதம் பிறந்ததால் கோவில்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை இன்று வழக்கத்தை விட ஐந்து மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் வரை கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த மல்லிகைப்பூ, தற்போது 1,000 ரூபாய்க்கும், கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பிச்சிப்பூ, தற்போது 850 ரூபாய்க்கும், ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தாமரை, தற்போது 12 ரூபாய்க்கும், கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த அரளிப்பூ, தற்போது 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று ரோஜா, செவ்வந்தி, கிரேந்தி உள்ளிட்ட அனைத்து பூக்களின் விலையும் ஐந்து மடங்காக உயர்ந்துள்ளது.

Views: - 409

0

0