திண்டுக்கல்லில் கொட்டித்தீர்த்த கனமழை: தாழ்வான பகுதிகளை சூழ்ந்த வெள்ளநீர்…தவிக்கும் மக்கள்..!!
Author: Aarthi Sivakumar2 January 2022, 11:19 am
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தொடர் மழையால் தாழ்வான பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஒருமாதமாக ஓய்வெடுத்திருந்தது. இந்தநிலையில் நேற்று சாரல் மழையாக பெய்து சிறிது நேரத்தில் பலத்த மழையாக மாறியது. சுமார் ஒரு மணி நேரம் இந்த மழை கொட்டித்தீர்த்தது.
அதன்பின்னர் மதியம் 1 மணிக்கு மீண்டும் பலத்த மழை பெய்தது. அப்போது விட்டு, விட்டு பலத்த மழை பெய்தது. இதனால் திண்டுக்கல் நாகல்நகர், பஸ் நிலைய பகுதிகள், திருச்சி சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இந்நிலையில், தொடர் மழையால் திண்டுக்கல் மாநகரில் உள்ள தெருக்களில் முழங்கால் அளவிற்கு தேங்கி நிற்கும் மழை நீரால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், மழை நீருடன் கழிவு நீரும் கலந்து செல்வதால் மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.
0
0