தமிழகத்தில் இந்த 9 மாவட்டங்களுக்கு இன்று ‘கனமழை’ அலர்ட்: உங்க மாவட்டத்துல என்ன நிலவரம்னு தெரிஞ்சுக்கோங்க!!
Author: Aarthi Sivakumar23 September 2021, 1:20 pm
சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 24 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அதன்படி, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை (செப்.24ம் தேதி) நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். பலத்த காற்று வீச வாய்ப்புள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
0
0