விடாது பெய்த கனமழை.. குடியிருப்புகளுக்குள் புகுந்த வெள்ளம் : 40 குடும்பங்கள் அவதி!!

Author: Udayachandran RadhaKrishnan
1 October 2021, 5:55 pm
Tirupur Heavy Flood -Updatenews360
Quick Share

திருப்பூர் : குன்னத்தூர் அடுத்த கருமஞ்சேறை பகுதியில் மழையின் காரணமாக, குளம் நிரம்பி குடியிருப்புக்குள் மழை தண்ணீர் புகுந்தது.

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அடுத்த கருமஞ்செறை ஊராட்சி பகுதியில் ஆதிதிராவிடர் காலனி உள்ளது. இங்கு சுமார் 40 குடும்பங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இவர்கள் குடியிருக்கும் பகுதியானது குளத்தை ஒட்டி உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக, இவர்களது குடியிருப்பை ஒட்டி உள்ள குளம் நிறைந்து மழைத்தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்தது.

இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் துணி, பணம், ரேஷன் கார்டு ஆதார் கார்டு உள்ளிட்ட பெரும்பாலான ஆவணங்கள் அனைத்தும் நீரில் மூழ்கியது.

மேலும்அங்குள்ள குடியிருப்புகள் அனைத்தும் ஓலை குடிசை என்பதால் பெண்கள், குழந்தைகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். எனவே மழைநீர் வீடுகளுக்குள் பூகாமல் இருக்க குளத்தை சுற்றி தடுப்பு சுவர் அமைத்து தரக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Views: - 762

0

0