தொடர் கனமழை எதிரொலி: தடுப்பணை கரை உடைந்து வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்….!!

6 November 2020, 1:03 pm
pazhani lake damage - updatenews360
Quick Share

திண்டுக்கல்: பழநி அருகே கனமழையால் நல்லதங்காள் தடுப்பணை கரை உடைந்து வீடுகள், விளைநிலங்களில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே, கொத்தயம் ஊராட்சியில் சுமார் 200 ஏக்கரில் நல்லதங்காள் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் கனமழையால், நேற்று முன்தினம் இரவு நல்லதங்காள் தடுப்பணை நிரம்பியது. இந்நிலையில், அணையின் பின்புற கரை உடைந்ததால் அரவங்காட்டு வலசு, கொண்டமநாயக்கன் வலசு ஆகிய கிராமங்களில் 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

200 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களும் நீரில் மூழ்கின. தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டு சில மாதங்களே ஆன நிலையில் கரையில் சேதம் ஏற்பட்டு கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குடியிருப்புகளை சுற்றிலும் நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Views: - 17

0

0