5 ஏக்கர் நிலத்தை ஏமாற்றி வாங்கிய வாரிசுகள் : தெருவில் நிற்கும் 102 வயது தாய்!!

9 November 2020, 3:41 pm
102 old Woman - Updatenews360
Quick Share

கோவை : பெற்ற மகள் சொத்தை ஏமாற்றி எழுதி வாங்கிவிட்டு தன்னை துன்புறுத்துவதாக மண்ணெண்ணெய் கேனுடன் வந்த மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை காரமடை சிக்காரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்லம்மாள்(வயது 102). இவருக்கு இரண்டு மகன்கள், நான்கு மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் செல்லமாளுக்கு சொந்தமான 5 ஏக்கர் 25 செண்ட் விவசாய நிலத்தை மகன்கள் மற்றும் மகள்கள் எழுதி வாங்கிவிட்டு தனக்கு ஆறாயிரம் மட்டுமே வழங்கிவிட்டு இது தான் உன் பங்கு என கூறி ஏமாற்றி விட்டதாகவும் தன்னை நிர்கதியாக விட்டு விட்டதாக தெரிவித்தார்.

கடைசி மகள் தான் கடைசியாக வாங்கிய இட பத்திரத்தை, கிரயம் செய்து விட்டு தன்னை ஏமாற்றி விட்டதாகவும் தற்போது வாழ வழியில்லாமல் கஷ்டப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் தற்போது தான் வசித்து வரும் வீடு உள்ள பகுதிகளை மறைத்து வைத்து உள்ளதாகவும் தெரிவித்த அவர் இது குறித்து நடவடிக்கைகள் எடுக்க காரமடை போலீசாரிடம் முறையிட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார்.

தனக்கு என்று தற்போது இருக்கும் வீட்டை மீட்டு தர வேண்டும் என கேட்டு கொண்டார். இந்த நிலையில் இன்று மண்ணெண்ணெய் கேனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவரை போலீசார் தடுத்தி நிறுத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்கபடும் என கூறியதை தொடர்ந்து மூதாட்டி திரும்பி சென்றார்

Views: - 22

0

0