கோவையில் இருந்து 7 பேருடன் புறப்பட்ட ஹெலிகாப்டர் தரையிறக்கம் : திருப்பத்தூரில் குவிந்த மக்கள்!!

18 October 2020, 2:41 pm
Helicopter - Updatenews360
Quick Share

திருப்பத்தூர் : கோவையில் இருந்து 7 பேருடன் புறப்பட்ட தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர் திருப்பத்தூர் சின்ன கந்திலி பகுதியில் பனிமூட்டத்தின் காரணமாக தரையிறக்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்ன கந்திலி ஊராட்சி தாதன்குட்டை கிராமத்தில் கோயமுத்தூரிலிருந்து ஆந்திரா மாநிலம் திருப்பதி வரை தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் 2 பைலட் உட்பட 7 நபர்கள் பயணம் செய்து உள்ளனர்.

இந்த நிலையில் திருப்பத்தூர் பகுதியில் இரவு முழுவதும் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதனையடுத்து காலைமுதல் வானம் கடும் பனிமூட்டத்துடன் காணப்பட்டது.

இதனால் முன்னெச்சரிக்கை நடைவடிக்காக தாதன்குட்டை என்ற பகுதியில் பைலட்கள் ஹெலிகாப்டரை பத்திரமாக தரை இறக்கி உள்ளனர். இச்சம்பவம் அறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 17

0

0