கோவை மத்திய சிறையில் மூலிகை தோட்டம் : முயல் விற்பனை துவக்கம்

16 November 2020, 10:31 am
Cbe Jail Garden - Updatenews360
Quick Share

கோவை : கோவை மத்திய சிறையில் முயல் விற்பனை மற்றும் மூலிகைத் தோட்டத்தை சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் இன்று துவக்கி வைத்தார்.

கோவை காட்டூர் பகுதியில் மத்திய சிறை வளாகம் உள்ளது. இந்த சிறை வளாகத்தில் அரை ஏக்கர் பரப்பளவிற்கு மூலிகைத் தோட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கற்றாழை உள்ளிட்ட 40 வகையான மூலிகைகளை இந்த அரை ஏக்கர் பரப்பளவில் கைதிகள் பராமரித்து வளர்க்க உள்ளனர். இதன்மூலம் மருந்துகள் தயாரிக்கப்படும் என்று சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் சிறையில் வளர்க்கப்படும் முயல்கள் விற்பனை இன்று துவங்கப்பட்டுள்ளது. அதன்படி இரண்டு முயல் ரூ 500 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் காடை முட்டையும் விற்பனை செய்யப்படுகிறது. சிறைத்துறை நிர்வாகத்தின் இந்த முயற்சி பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது

Views: - 25

0

0