பாஜகவின் வேல் யாத்திரைக்கு காவல்துறை விதித்த தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

7 November 2020, 7:17 pm
Quick Share

பாஜகவின் வேல் யாத்திரைக்கு காவல்துறை விதித்த தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பாஜகவின் வேல் யாத்திரைக்கு சென்றவர்களில் மாஸ்க் போடாதவர்களுக்கு ஏன் அபராதம் விதிக்கவில்லை என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கோவில் சென்றவர்களில் பலர் முகக்கவசம் அணியவில்லை என்பதற்கு வீடியோ ஆதாரம் உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி ஐகோர்ட்டில் பாஜக தொடர்ந்த வழக்கு விசாரணையில் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்த தமிழக டி.ஜி.பி உத்தரவை எதிர்த்து பாஜக பொதுச்செயலாளர் மனு அளித்துள்ளார். நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது.

Views: - 14

0

0