உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா…..? இந்தி விவகாரத்தில் திமுகவிற்கு அண்ணாமலை ‘பளார்‘!!

18 September 2020, 6:09 pm
Stalin Annamalai- updatenews360
Quick Share

ஈரோடு : திமுகவினர் நடத்தும் 47 பள்ளிகளில் இந்தி மூன்றாவது மொழியாக திணிக்கப்படுகிறது என தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை குற்றம்வசாட்டியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு வந்த தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா இன்னும் புரிந்து கொள்ள வேண்டும். நீட் தேர்வு குறித்து எங்த ஒரு மாணவரும், பெற்றோரும் சாலைக்கு வந்த போராடவில்லை. நீட் தேர்வு குறித்து தவறான பிம்பம் மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் கட்டமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

நீட் தேர்வு முடிவுகள் வெளியானதும் நீட் தேர்வு குறித்து சூர்யவுக்கு புரியும் என்று, அதன் பின் அவர் நீட் தேர்வு குறித்த நிலைப்பாட்டை மாற்றுவார் என தெரிவித்தார். நீட் விவகாரத்தை அரசியல் தலைவர்கள் தேவையில்லாமல் அரசியல் ஆக்குவதாக குற்றம்சாட்டினார்.

மும்மொழி கொள்ளை பற்றி பேசிய அண்ணாமலை, மும்மொழி கெள்கையில் பாஜகவின் நிலைப்பாடு என்றும் மாறாது என்றும், அதிமுக பாஜக கூட்டமணி சுமூகமாகவே உள்ளதாகவும் கூறினார். திமுக நடத்தும் 47 பள்ளிகளில் இந்தி மூன்றாவது மொழியாக திணிக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டிய அவர் தமிழகத்தில் விரைவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று கூறினார்.

Views: - 8

0

0