இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கு : 6 பேர் மீது குண்டாஸ்..!

Author: Udayachandran
8 October 2020, 11:41 am
Murder Kundas - Updatenews360
Quick Share

கோவை : இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் 6 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.

கோவை ஆவாரம்பாளையம் பகுதியை சேர்ந்த பிஜூ (வயது 37) என்பவர் முன்விரோதம் காரணமாக கடந்த மாதம் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் முதற்கட்டமாக கார்த்திக், ராஜா, அருண், அரவிந்த், பிரபு, பிரவீன் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான ஆறுமுகம் என்பவரும் கைதாகியுள்ளார்.

இந்த நிலையில், கைதான 6 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கான உத்தரவை சிறையில் உள்ள 6 பேரிடம் போலீசார் வழங்கினர்.

Views: - 36

0

0