இந்து முன்னணி பிரமுகர் கைது.. கோஷமிட்ட நிர்வாகிக்கு ‘பளார்’ விட்ட போலீஸ்.. குண்டுகட்டாக தூக்கிச்சென்ற காவலர்கள்..!!

Author: Babu Lakshmanan
14 October 2022, 5:35 pm
Quick Share

கரூரில் மதக்கலவரத்தை தூண்டும் விதமாக செயல்பட்டதாக இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்ட நிலையில், காவல் நிலையம் முன்பு கோஷமிட்டவர்களில் ஒருவரை போலீசார் அடித்து குண்டு கட்டாக காவல் நிலையத்தில் தூக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு ஜோதிடர் தெருவில் வசிப்பவர் சக்தி (32).
இந்து முன்னணி கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் வெங்கமேடு எம்.ஜி.ஆர் சிலை அருகில் இந்துக் கடைகளிலேயே பொருட்களை வாங்குவோம் என்றும், ஜவுளி ஆனாலும் சரி, மளிகை பொருட்கள் ஆனாலும் சரி, கம்ப்யூட்டர் முதல் கருவேப்பிலை வரை நாம் வாங்கும் பொருட்கள் இந்துக்கள் கடையிலேயே வாங்க வேண்டும், கடைகளில் இந்து சாமி படம் உள்ளதா என பார்த்து வாங்க வேண்டும் என்று மதப் பிரிவினை ஏற்படும் வகையில் நோட்டீஸ் ஒட்டி சமூக வலைத்தளங்களில் பரப்பினார்.

karur hindu munnani - updatenews360

இது தொடர்பாக வழக்கு வெங்கமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் உதயகுமார் கொடுத்த புகாரின் பெயரில் இந்து முன்னணி கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்தி கைது செய்யப்பட்டார். அவரை வெள்ளியணை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் நேற்று இரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.

karur hindu munnani - updatenews360

அப்போது, இந்து முன்னணியினர் கோஷங்களை எழுப்பியதால் போலீசாருக்கும், இந்து முன்னணியினருக்கும் வாக்குவாதமும், தள்ளு முள்ளும் ஏற்பட்டது. அப்போது இந்து முன்னணியின் கரூர் நகர செயலாளர் வெற்றியை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தாக்கியும், அவரை குண்டு கட்டாக தூக்கி காவல் நிலையத்திற்குள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

karur hindu munnani - updatenews360

இதனையடுத்து, வெங்கமேட்டில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்ததோடு, இனி தமிழகம் முழுவதும் அந்த துண்டு பிரசூரங்கள் விநியோகிக்கப்படும் என்றும் இந்து முன்னணி அறிவித்து இன்று முதல் நடைமுறைபடுத்தியுள்ளது.

karur hindu munnani - updatenews360
Views: - 680

1

0