இந்து முன்னணி கொடிக் கம்பம் வைத்த இளைஞருக்கு அடி உதை : கொலை மிரட்டல் விடுத்தால் பரபரப்பு!!

By: Udayachandran
16 October 2020, 12:51 pm
Hindumunnai issue - Updatenews360
Quick Share

கோவை : காரமடை அருகே இந்து முண்ணனி கொடி கம்பம் வைத்த இளைஞர் மற்றும் அவரது குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை மேட்டுப்பாளையம் அருகே காரமடை அடுத்துள்ள சிக்காரம் பாளையம் கிராமப் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது 52). சிறு தொழில் செய்து வருகிறார். இவரது மகன்சஞ்சய் (வயது17). தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். இந்து முன்னணி அமைப்பில் உள்ளார்.

கடந்த 11ஆம் தேதி காலை 10 மணிக்கு சிக்காரம் பாளையத்தில் இந்து முன்னணி சார்பில் கொடிக்கம்பம் நடப்பட்டு பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு ஊரிலுள்ள ஒரு சிலர் பிரச்சனை செய்து எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

இதுகுறித்து தகவல் கிடைக்கப் பெற்றதும் காரமடை காவல்துறையினர் மற்றும் நில வருவாய் ஆய்வாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை முடிவில் அங்கு நடப்பட்ட கொடிக்கம்பம் மற்றும் பெயர்ப்பலகை அகற்றப்பட்டு கனகராஜுக்கு சொந்தமான இடத்தில் இந்து முன்னணி சார்பில் கொடிக்கம்பம் நடப்பட்டு பெயர் பலகை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது

இந்த நிலையில் சிக்காரம் பாளையம் பிள்ளையார் கோவிலில் ஊர்க்கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று கனகராஜை ஒருசில ஊர்க்காரர்கள் அழைத்ததாக தெரிகிறது அதனைத் தொடர்ந்து கனகராஜ் மற்றும் அவரது மகன் சஞ்சய் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றதாக தெரிகிறது.

அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் உங்கள் குடும்பம் முழுவதும் ஊர் காலில் விழுந்துமன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் உங்கள் குடும்பத்தை உயிரோடு விடமாட்டோம் இந்த ஊரில் நீங்கள் இருக்கக்கூடாது என்று தந்தை மகன் இரண்டு பேரையும் தகாத வார்த்தைகளால் திட்டியும் அடித்தும் குடும்பத்தோடு உங்களை கொன்று விடுவோம் . மீறி எங்கள்மீது புகார் கொடுத்தால் எங்கள் ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக புகார் கொடுத்து விடுவோம் என்று கூறி மிரட்டியதாக தெரிகிறது.

அதன் பின்னர் கனகராஜ் மற்றும் அவரது மகன் சஞ்சய் ஆகியோர் இரவு காரமடை காவல் நிலையம் சென்றனர். நடந்த சம்பவம் குறித்து கனகராஜ் காரமடை போலீஸில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க சிக்காரம் பாளையம் பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் காரமடை நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 34

0

0