முழு ஊரடங்கினால் வாழ்வாதாரம் கேள்விக்குறி : ரூ.5,000 நிவாரணம் வழங்க ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை…!!

11 June 2021, 3:44 pm
Quick Share

மதுரை : கொரோனா பொது முடக்கம் அமலில் உள்ள வரை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்கக்கோரி இந்து முன்னணி ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :- கொரோனா தொற்று ஊரடங்கால் ஆட்டோ தொழிலாளர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று மாதங்களாக ஆட்டோ தொழில் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது. ஊரடங்கினால் மிகவும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள ஆட்டோ தொழிலாளர்கள் காக்க தமிழக அரசு சலுகைகளை அறிவிக்க வேண்டும். பொதுமுடக்கம் உள்ளவரை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரணமாக மாதம்தோறும் 5000 ரூபாய் வழங்க வேண்டும்.

மேலும் வாகனங்களின் இன்சூரன்ஸ், வரி, எப்.சி கட்டணம் ஆகியவற்றை தமிழக அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும். வாகனங்களின் பெயரில் பெறப்பட்டுள்ள மாதந்தோறும் செலுத்த வேண்டிய கடன் தொகைக்கு ஊரடங்கு முடியும் வரை விதிவிலக்கு அளிக்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்தவர்கள் செய்யாதவர்கள் என அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களும் அரசு நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும். பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பரிதவிக்கும் ஆட்டோ ஓட்டுனர்களின் குடும்பத்தை பாதுகாக்க தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும், என வலியுறுத்தியுள்ளனர்.

Views: - 149

0

0

Leave a Reply