இந்து கடவுளை இழிவுபடுத்திய விவகாரம் : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார்..!

13 August 2020, 8:03 pm
Cbe complaint - updatenews360
Quick Share

இந்து கடவுளை இழிவுபடுத்தியுள்ள தி.மு.க. ஆதரவாளர் சவுக்கு சங்கர் மீது சட்ட ரீதியாக புகார்‌ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அகில பாரத அனுமன் சேனா அமைப்பின் சார்பில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது :- அயோத்தியில்‌ ஸ்ரீராமர் கோயிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அன்றை தினம் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது வீட்டில் ராமர் படத்தை வைத்து வழிபாடு நடத்தினார். அதேபோல, தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தங்களின் இல்லத்தில்‌ ஸ்ரீராமர் படத்தையும்‌, உருவச்சிலையையும்‌ வைத்து வழிபட்டனர்.

அரசுத் துறையில் ஊழியராக பணியாற்றி அதிலிருந்து விலகி ஆன்லைனில் கேலி கிண்டல் செய்து வரும் தி.மு.க. ஆதரவாளரான சவுக்கு சங்கர் என்பவர் இந்து கடவுளை இழிவுபடுத்தும் வகையில் டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

savukku shankar 1- updatenews360

அதில், “அப்படியே மாரியாத்தாவுக்கு கூழ் ஊத்தி கருவாட்டு கொழம்பும், முருங்கைக் கீரையும் சேர்ந்து ஒரு போட்டோ போடுங்க மேடம்” என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை கேலி செய்யும் வகையில் இந்து மக்கள் வழிபாட்டையும், கடவுளையும் அவர் கொச்சைப்படுத்தி உள்ளார்.

மத ரீதியாக மோதலை ஏற்படுத்தும் நோக்கத்தில் அவர் இந்த பதிவை வெளியிட்டு இருக்க வாய்ப்புள்ளது. இந்தப் பதிவு மூலமாக அவர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை அவமானப்படுத்தி அசிங்கப்படுத்தி, சந்தோஷப்பட நினைத்திருக்கலாம். இல்லாவிட்டால் வேறு யாராவது தூண்டி விட்டு இதுபோன்ற செயல்களை அவர் செய்திருக்கலாம்.

சவுக்கு சங்கர் பலரையும் வமரியாதை வார்த்தைகளால் விமர்சனம் செய்து கேவலமாகவும், கொச்சைப்படுத்தும் வகையிலும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார். தனது பதிவுகள் மூலமாக ஆதாயம் பெறவும் தான் சார்ந்த கட்சிக்கு விசுவாசமாக இருக்கவும் அவர் தீவிரம் காட்டி வருகிறார். அவர் மீது இந்திய தண்டனைச்‌ சட்டம்‌ பிரிவு 153A&(1),295A-ன்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை நகரில் இந்து கடவுள்களை அவமரியாதை செய்த விவகாரம் மக்கள் மனதில் நீங்காத பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இந்து மக்களையும், கடவுளையும் அவமானப்படுத்தும் வகையில் பதிவை வெளியிட்ட சவுக்கு சங்கர் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து மக்களின் உணர்வுகளுக்கும், வழிபாட்டிற்கும் இடையூறாக செயல்களை தடுக்க வேண்டும். மத ரீதியான வழிபாடு மற்றும செயல்பாடுகளுக்கு இடையூறு செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக வலைதள பதிவுகளை போலீசார் கணடறிந்து, அவற்றை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில பாரத அனுமன் சேனா சார்பில் கேட்டுக் கொள்கிறோம், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 15

0

0