இனி மாதம் ஒரு முறை காவலர்களுக்கு வரலாற்று சுற்றுலா : விழுப்புரம் எஸ்பி அறிவிப்பு!!

18 April 2021, 4:12 pm
Villupuram SP -Updatenews360
Quick Share

விழுப்புரம் : காவலர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்துடன் மாதந்தோறும் வரலாற்றுச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படும் என விழுப்புரம் எஸ்பி அறிவித்துள்ளார்.

நடுநாட்டு வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வு நடுவத்தின் சார்பில் உலக மரபு தினம் விழுப்புரத்தில் இன்று கொண்டாடப்பட்டது. விழுப்புரம் ஆயுதப்படை வளாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார்.

அப்போது பேசிய அவர், விழுப்புரம் மாவட்டத்திலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பானை ஓடுகள் மற்றும் பாறை ஓவியங்கள், செப்பேடுகள் கண்டறியப்பட்டு இருக்கின்றன.பல்லவர் சோழர் கால கோயில்கள் என ஏராளமான வரலாற்றுத் தடயங்கள் இருக்கின்றன.

செஞ்சிக் கோட்டை உள்ளிட்ட இடங்கள் நாம் காண வேண்டிய இடமாகும். இதுபற்றி எல்லாம் காவல்துறையினர் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்காக மாதத்தில் ஒருநாள் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வரலாற்றுச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள்.

இதற்கான ஏற்பாட்டினை மாவட்டக் காவல்துறை செய்யும் என்றார். இதில் விழுப்புரம் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. இதற்கான ஏற்பாடுகளை நடுநாட்டு வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வு நடுவத்தின் ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் கோ.செங்குட்டுவன் செய்திருந்தார். இதில் காவல்துறை மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்வர்கள் கலந்து கொண்டனர்.

Views: - 25

0

0