வளிமண்டல சுழற்சியால் கொட்டித் தீர்க்கும் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைனு தெரிஞ்சுக்கோங்க!

Author: Rajesh
12 February 2022, 9:08 am
Rain School Leave -Updatenews360
Quick Share

தொடர் கனமழை பெய்து வருவதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக 12ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் லலிதா உத்தரவிட்டுள்ளார்.

அதேபோன்று நாகை மாவட்டத்தில் 1 முதல் 8 வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்மழையை முன்னிட்டு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. எனினும், தேர்வு நடைபெறும் பள்ளி மாணவர்கள் மட்டும் பள்ளிகளுக்கு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக திருவாரூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு தவிர இன்று அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

Views: - 489

0

0