கரூரில் தொடர் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

Author: Aarthi Sivakumar
1 October 2021, 9:49 am
Quick Share

கரூர்: கனமழை காரணமாக கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கரூர் மாவட்டம் முழுவதுமே நேற்று இரவு முதலே பரவலாக கனமழை பெய்துள்ளது. தற்போதும் மழை பெய்து வருகிறது. ஆனால் சற்று மிதமான அளவில் மழை பெய்கிறது.

schools-colleges-declared-holiday-in-karur-as-rain-lashes-the-district

காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்சமாக 80 மிமீ மழையும் குறைந்தபட்சமாக 20 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் மழை நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வருவாய்த் துறையினருடன் இணைந்து மழை பாதிப்புகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

ஆங்காங்கே மழை தண்ணீர் தேங்கியிருப்பதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி கரூரில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

Views: - 455

0

0