வீட்டில் இருந்து கொண்டே அடுத்தவர் மனைவிக்கு வலை விரிக்கும் ஆண்கள்: அதிர்ச்சிகர ரிப்போர்ட்..!

23 May 2020, 8:06 pm
Quick Share

நாம் இதுவரை சந்தித்திராத புதுப்புது விஷயங்களை நமக்கு காட்சிப் படுத்திக் கொண்டிருக்கிறது இந்த கொரோனா வைரஸ். பொதுவாக ஊரடங்கு உத்தரவு என்றால் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் என்பதே நாம் அறிந்த விஷயம். ஆனால், தற்போது 60 நாட்களை கடந்து நமது தேசத்தில் ஊரடங்கு முதல்முறையாக அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் வயதால் மட்டும் வளர்ந்த நாம், நமது குழந்தைப் பருவத்திற்கு மீண்டும் சென்று வந்து இருக்கிறோம் என்றால் அது மிகையாகாது.

வீட்டில் வெறுமனே இருக்கும் ஒவ்வொருவரும் தாயக்கட்டை விளையாடுதல், பட்டம் விடுதல், மாலை நேரங்களில் சிற்றுண்டிகளை சமைத்து உண்ணுதல், இன்னும் நமது குழந்தை பருவத்தில் நாம் விளையாடிய பல்வேறு விளையாட்டுக்களை விளையாடுதல் உள்ளிட்ட பல்வேறு காரியங்களை செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம். வாழ்வாதாரத்திற்கு மட்டுமே குறை ஆனால் நமது வாழ்க்கையில் குறையே இல்லை. மகிழ்ச்சி மட்டுமே என்றே கூறிவிட முடியும். வேலை இல்லாமல் வீட்டில் இருப்பதால் இத்தகைய செயல்களைச் செய்து நமது குடும்பத்தினரோடு நாமும் மகிழ்ச்சியாக பொழுதை கழித்து வருகிறோம்.

அதே நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த ஊரடங்கு நம்மை ஒரு கெடு பாதையில் அழைத்துச் செல்வதாக கூறுகின்றனர் உளவியலாளர்கள். இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருக்கும் கணவன்மார்கள், நீண்ட காலம் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் வாழ்ந்து அலுப்பை ஏற்படுத்தி கொண்டு தங்களது செல்போனை எடுத்து அதன் மூலம் இந்த வெறுமையை போக்க துவங்கியுள்ளனர். பொதுவாகவே நமக்கு செல்போன் பயன்படுத்தும் பழக்கம் இந்த காலகட்டத்தில் இயல்பாகவே அதிகரித்திருக்கிறது.இள வட்டாரங்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது என்று கூறிவிட முடியும். தங்கள் மனதுக்கு பிடித்தவர்களுடன் உரையாட போதுமான நேரம் கிடைத்திருக்கிறது.

ஆண்கள் பெண்கள் என அனைத்து தரப்பினரும் எதிர்பாலினத்தவர் மீது ஈர்ப்பு கொண்டு அவர்களுக்கு குறுஞ்செய்திகள் மூலம் தங்களது மனதை பரிமாறிக் கொண்டு ஒருவருக்கொருவர் காதல் வயப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்த ஊரடங்கு காலத்தில் ஆபாச படங்கள் பார்ப்பதும் பிறர் வீட்டுப் பெண்களை பார்ப்பதும் அதிகரித்திருக்கிறது என்று ஆய்வு முடிவுகள் நமக்கு தெரிவிக்கின்றன.
இதுகுறித்து கோவையில் உள்ள ஒரு மருத்துவர் நம்மிடையே பகிர்ந்து கொண்ட சில அதிர்ச்சிகர தகவல்களை இப்போது பார்ப்போம்.

பொதுவாகவே ஆண் பெண் இருவருக்கும் தங்களது எதிர்பாலினத்தவர் மீது, அதாவது ஆண் என்றால் பெண் மீதும் பெண் என்றால் ஆண் மீதும் ஒருவித ஈர்ப்பு எழுவது இயற்கையின் நியதி. ஆனால் நமது கலாச்சார முறைப்படி ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் முறை. இந்த ஊரடங்கு அந்த முறைகளை தவிடு பொடி ஆக்கும் வகையில் பல்வேறு அபாய கட்டத்திற்கு நம்மை இழுத்துச் சென்றிருக்கிறது என்று கூறுகின்றார் மருத்துவர். வீட்டிலிருக்கும் கணவன்மார்கள் மனைவி உடன் இருக்கும் பொழுதே பிறர் மனையை நோக்கி, அதாவது மற்றவர் மனைவி அல்லது பிற பெண்களை தங்களது வளையில் விழ வைத்து தங்களது இச்சைகளைத் தீர்த்துக் கொள்கின்றனர்.

இந்த வழக்கம் சமீபத்தில் அதிகரித்திருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன என்று உறுதிபட தெரிவிக்கின்றார் கோவை சேர்ந்த மருத்துவர். அதே நேரத்தில் ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 80 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாகவும் மருத்துவர் கூறுகின்றார்.
காம இச்சைகளைத் தாண்டி தங்களுக்கு இருக்கும் நேரத்தை பொழுதுபோக்காக கழிக்கவே எதிர்பாலினத்தவர் மீது ஈர்ப்பு கொண்டு ஒருவருக்கு குறுஞ்செய்திகள் அனுப்பி அவரிடம் பேசி பழகி வருவதாக தெரிவிக்கும் மருத்துவர், இந்த பழக்க. வழக்கம் நாளடைவில் விபரீத உறவாக மாறி அபாயத்தை உருவாக்க விளைவதாக தெரிவிக்கின்றார்.

ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் இயல்பான பண்புதான் த இது என்றாலும் நமது குடும்ப சூழல் நமது பண்பாடு , கலாச்சாரம் ஆகியவற்றை உணர்ந்து இத்தகைய செயல்களை தவிர்த்தால் பிரச்சனைகள் இன்றி ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை வாழ முடியும் என்றும், எனவே இதனை கருத்தில் கொண்டு ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த ஊரடங்கு காலத்தில் தங்களது பொன்னான நேரத்தை ஆரோக்கியமான காரியங்களுக்கு செலவிட வலியுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.நேரம் இருக்கிறதே பேசலாம் என்றும் தவறான பாதையில் சென்றுவிடாமல், நல்வழியை பின்பற்றி நல்ல நடத்தைகளை கடைபிடிக்கவேண்டிய நேரம் இது.