கேரள முன்னாள் ஆளுநருக்கு சொந்தமான வீட்டில் சூதாட்டம்.! 28 பேர் கைது.!!
14 August 2020, 2:37 pmசென்னை : உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான சதாசிவத்துக்கு சொந்தமான வீட்டில் சூதாட்டம் நடைபெற்றதாக 28 பேரை போலீசார் கைது செய்தனர்.
உச்சநீதிமன்றத்தின் முன்னாளள் தலைமை நீதிபதியுமான, கேரள மாநிலத்தில் முன்னாள் ஆளுநருமான பி.சதாசிவத்திற்கு சொந்தமாக சென்னை சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வீடு உள்ளது.
தற்போது அந்த வீட்டை பிரபு என்ற பிரபாகரன் என்பவர் குத்தகைக்கு எடுத்துள்ளார். இந்த நிலையில், அந்த வீட்டில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் சூதாட்டம் நடப்பது உறுதியான நிலையில், அங்கு சூதாடிய 28 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சூதாட்டத்திற்காக பயன்படுத்திய ரூ.9.52 லட்ச ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.