வனவிலங்குகளை வேட்டையாட வீட்டில் அவுட்டுக்காய் தயாரிப்பு : ஒருவர் கைது!!

16 September 2020, 11:07 am
Cbe one Arrest - updatenews360
Quick Share

கோவை : வனவிலங்குகளை வேட்டையாட அவுட்டுக்காயை வீட்டிலே தயாரித்தவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

கோவை காரமடை அருகே சீலியூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி என்பவரது மகன் மூர்த்தி (வயது 48). இவர் தனது வீட்டில் காட்டுப்பன்றி, மான் மற்றும் வனவிலங்குகளை வேட்டையாட அவுட்டு காய் என்னும் நாட்டு வெடி வீட்டில் வைத்து தயாரிப்பதாக காரமடை மற்றும் பெரிய நாயக்கன்பாளையம் வண துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து கோவை மண்டல கூடுதல் முதன்மை தலைமை வனபாதுகாப்பாளர் மற்றும் கோவை மாவட்ட வன அலுவலர் ஆகியோரின் ஆகியோர் உத்தரவின் பேரில் சீலியூர் பேருந்து நிறுத்தம் அருகே இருந்த மூர்த்தியை பிடித்து வீட்டில் சோதனை செய்தபோது ஏர்கன் மற்றும் நாட்டு வெளியே தயாரிக்க தேவையான வெள்ளைநிற வெடி மருந்து மற்றும் கரி மருந்து மூலப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

இதுப்போன்று வேறு யாராவது வீட்டில் வைத்து நாட்டு வீடுகளை தயாரிப்பது குறித்து தகவல் தெரிந்தால் அந்தந்த வனச்சரக அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். அவுட்டுக்காயை சாப்பிட்டு சமீபத்தில் காட்டு யானை உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.