ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு ‘ஓரினச்சேர்க்கை டார்ச்சர்‘ : இளம் ஆசிரியர் கைது!!

20 October 2020, 2:39 pm
Homesex Teacher Arrest - Updatenews360
Quick Share

செங்கல்பட்டு : கணிதப் பாடம் கற்றுத் தரும் இளம் வயது ஆசிரியர் ஒன்பதாம் வகுப்பு மாணவனை கட்டாயப்படுத்தி ஓரினசேர்க்கையில் ஈடுபடுத்திய குற்றத்திற்காக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்.

எழுத்து அறிவித்தவன் இறைவன் என்ற கூற்று உலகம் முழுவதும் நிலவி வருகின்றது .மாதா பிதா குரு தெய்வம் என்ற பழமொழியை பின்பற்றும் மக்கள் மனதில் ஒரு சில ஆசிரியர்கள் செய்யும் தவறால் ஆசிரியர்கள் மீது உள்ள நன்மதிப்பு குறைந்து போகின்றது.

செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் அடுத்த மேல் மணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் கார்த்திக் (வயது 26) என்பவர் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள மெட்ரிக் பள்ளியில் ஐந்து முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கணிதம் பயிற்றுவிக்கிறார்.

ஊரடங்கு சட்டத்தால் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் மேல் மணப்பாக்கத்தில் தன்னுடைய வீட்டில் இருந்து கொண்டு ஆன்லைன் மூலம் பாடங்களைக் கற்றுக் கொடுத்து வருகின்றார். இந்த சூழ்நிலையில் ஆன்லைன் பாடம் கற்றுக் கொடுக்க உதவியாக செங்கல்பட்டு செயின்ட் ஜோசப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் விக்கி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) துணைக்கு வைத்துக் கொண்டார்.

சிறுவனை கார்த்திக் கட்டாயப்படுத்தி ஓரினசேர்க்கை வைத்து வந்துள்ளார். மூன்று மாத காலமாக கார்த்திக்கிடம் அகப்பட்ட சிறுவன் இதை வெளியே சொல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். சிறுவனின் நடவடிக்கையில் வித்தியாசத்தை கண்டறிந்த சிறுவனின் அம்மா பாலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் ஆசிரியர் கார்த்திக் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் மூன்று மாத காலமாக சிறுவனுடன் ஓரினச்சேர்க்கை செய்தது உண்மை என கண்டறிந்ததால் கணித ஆசிரியர் கார்த்திக் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Views: - 91

0

0