கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா இன்று தனது 102-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் வெளியிட்ட வாழ்த்து பதிவில், “பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் ‘தகைசால் தமிழர்’ சங்கரய்யாவின் 102-வது பிறந்தநாள்! பொதுவாழ்விலும் பொதுவுடைமை லட்சியங்களைக் கடைப்பிடிப்பதிலும் நம் எல்லோருக்கும் வழிகாட்டியாக விளங்கும் அவர் நலமுடன் வாழிய பல்லாண்டு” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் சங்கரய்யாவுக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மூலம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது அறிவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சங்கரய்யாவுக்கு தமிழக அரசு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.