தனியார் மருத்துவமனையின் மாடியில் இருந்து விழுந்த ஊழியர் மரணம் : மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார்!!

By: Udayachandran
15 October 2020, 11:01 am
Hospital staff Dead - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : நாகர்கோவில் அருகே தனியார் மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து சலவைத் தொழிலாளி உயிரிழந்த விவகாரத்தில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஈசாந்திமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன். 42 வயதான இவர் சுங்கான்கடை பகுதியிலுள்ள முத்து நரம்பியல் மருத்துவ மனையில் சலவை தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

வழக்கம்போல் அவர் இன்று மாலையில் பணியில் இருக்கும்போது திடீரென மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். சம்பவத்தை அறிந்து அவரது உறவினர்கள் சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சென்று விசாரித்த போது சரியாக பதில் அளிக்கவில்லை என தெரிகிறது.

இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் ஐயப்பனின் மரணத்தில் மர்மம் உள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். வழக்கமாக பணி செய்து கொண்டிருக்கும் பகுதியில் இருந்து அவர் தவறி விழுவதற்கும் வாய்ப்பு இல்லை எனவும் ஏதேனும் பிரச்சினை நடந்திருக்கலாம் எனவும் அதனால் இந்த மரணம் நிகழ்ந்து உள்ளதாகவும் உறவினர்கள் கூறினர்.

சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த இரணியல் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதோடு உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள பிரபலமான மருத்துவமனையில் மூன்றாவது மாடியிலிருந்து தொழிலாளி கீழே விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 37

0

0