கண் விழித்த எஸ்பிபி…! மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்…!

16 August 2020, 9:37 am
spb - updatenews360
Quick Share

சென்னை: எஸ்.பி.பாலசுப்ரமணியம் மயக்க நிலையிலிருந்து மீண்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திரையுலகின் பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி. ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியவர். 74 வயதான அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதையடுத்து சென்னை சூளைமேட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் குறைய 2 நாட்களில் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பி விடுவேன் என்று அவர் வீடியோ வெளியிட்டார்.

இந் நிலையில், சில நாட்கள் முன்பு அவருடைய உடல்நிலை மோசம் அடைய  தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை தரப்படுகிறது.

ஆனாலும் உடல்நிலை கவலைக்கிடமானதால் மருத்துவர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். இந் நிலையில்  எஸ்பிபி உடல்நிலை பற்றி மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் இருந்து அறிக்கை வெளியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவ்வப்பொழுது கண்விழிப்பதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிப்பதாகவும் மருத்துவர்கள் குழு கூறி உள்ளது. இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது.

Views: - 35

0

0