ஓட்டல் உரிமையாளரை மிரட்டிய வழக்கு : நீதிமன்றத்தில் ஆஜரானார் மீரா மிதுன்..!!

Author: Babu Lakshmanan
3 September 2021, 11:17 am
meera mithun - updatenews360
Quick Share

சென்னை : ஓட்டல் உரிமையாளரை மிரட்டிய வழக்கில் நடிகை மீரா மிதுன் இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். கடந்த 11ம் தேதி மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி மீரா மீதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

விசாரணைக்கு ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், கடந்த 14ம் தேதி கைது செய்யப்பட்டனர். பின்னர், மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இதனிடையே, சென்னை எம்கேபி நகரைச் சோ்ந்த ஜோ மைக்கேல் பிரவீண், என்பவா் சில மாதங்களுக்கு முன்பு எம்கேபி நகா் காவல் நிலையத்தில் புகாா் ஒன்றை அளித்தாா். அதில், மீரா மிதுன் தன்னைப் பற்றி சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பி வருவதாகவும், அவா் மீதும் நடவடிக்கை எடுக்கும்படியும் குறிப்பிட்டிருந்தாா். இந்த புகாா் தொடா்பாக எம்கேபி நகா் போலீஸாா் மீரா மிதுன் மீது வழக்குப் பதிவு செய்தனா். அதேபோல, எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஊழியரை நடிகை மீரா மிதுன் மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் அடிப்படையில், நடிகை மீரா மிதுன் மீது ஆபாசமாகப் பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் என்ற இரண்டு பிரிவின் கீழ் எழும்பூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நடிகை மீரா மிதுன் மீது பதிவு செய்யப்பட்ட 2வது வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை, எழும்பூர் நீதிமன்றத்தில் 30 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்காக நடிகை மீரா மிதுன் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.

Views: - 323

0

0