நோட்டமிட்டு வீட்டை உடைத்து திருடும் பலே திருடர்கள் வாகன சோதனையில் கைது…

Author: kavin kumar
14 August 2021, 8:46 pm
Quick Share

கோவை: கோவையில் பூட்டிய வீடுகளை நோட்ட்மிட்டு கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை புறநகர் பகுதியில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு தொடர்ந்து பூட்டை உடைத்து தினம் தினம் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதற்காக கோவை மாவட்ட எஸ்.பி செல்வனகரதினம் உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் ஆனந்த ஆரோக்கியராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் முன்னிலையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமை காவலர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இன்று காலை 8 மணி அளவில் கோவில் பாளையம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சிவக்குமார் குரும்பபாளையம் காலப்பகுதியில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகே சோதனையில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது எதிரே வந்த பஜாஜ் பல்சர் வாகனத்தில் நேம் பிளேட் இல்லாமல் இரண்டு வாலிபர்கள் மின்னல் வேகத்தில் வந்தன. அவர்களை பிடித்து சோதனை செய்ததில் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினார். தொடர்ந்து விசாரணையில் அவர்கள் கோவை கோவில்பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கீரணத்தம் பஞ்சாயத்து லட்சுமி கார்டன் ஐச் சேர்ந்த விஜயகுமார், தஞ்சாவூரைச் சேர்ந்த கண்ணன், என்பது தெரியவந்தது.

இவர்களை பிடித்து தொடர் விசாரணையில் 15 லட்சம் மதிப்பிலான 55 பவுன் நகைகள் மீட்கப்பட்டது. இவர்கள் இதுவரை 10- க்கும் மேற்பட்ட திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்பதும், கோவை கோவில்பாளையம் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற வழக்குகளில் உள்ளதாகவும் தெரிய வந்தது. துரிதமாக செயல்பட்ட தனிப்படையினரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வனகரதினம் பாராட்டினார்.

Views: - 271

0

0