கோவையில் வீடு இடிந்து விபத்து : 2 பேர் உயிரிழப்பு..!

7 September 2020, 9:51 am
Quick Share

கோவை மாவட்டம் கே.சி. தோட்டம் பகுதியில் கனமழையால் வீடு இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.

இதனையடுத்து அங்குள்ள செட்டி வீதி கே.சி. தோட்டம் பகுதியில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி வீடு, நேற்று இரவு பெய்த மழையினால் திடீரென்று இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளில் 8 பேர் சிக்கியுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் வெகுநேரம் போராடி இடிபாடுகளில் சிக்கி இருந்து 6 பேரை உயிருடன் பத்திரமாக மீட்டனர். ஆனால் எதிர்பாராத விதமாக சுவேதா, கோபால் ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0