வாடகைக்கு குடியிருந்தவர் வீட்டில் நகையை அபேஸ் செய்த ஹவுஸ் ஓனர் : 10 சவரன் நகையுடன் சிக்கிய சுந்தரி!!

Author: Udayachandran RadhaKrishnan
27 June 2021, 11:48 am
Women Arrest For theft -Updatenews360
Quick Share

மதுரை : வாடைக்கு குடியிருந்தவர் வீட்டில் புகுந்து 10 சவரன் தங்க நகைகளை திருடிய வீட்டின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை அகிம்சாபுரத்தை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் தனது கணவன் சிவசாமியுடன் கடந்த ஜூன் 23 ஆம் தேதி அன்று உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்துள்ளனர்,

இந்த நிலையில் ஜூன் 25 ஆம் தேதி மாலையில் வீடு திரும்பியதும் அணிந்திருந்த நகைகளை மீண்டும் பீரோவில் வைப்பதற்காக பார்த்தபோது அதில் இருந்த 7 சவரன் செயின் மற்றும் 3 சவரன் செயின் காணாமல் போய் இருப்பது தெரியவந்தது.

இதனைதொடர்ந்து தனது கணவனின் பெற்றோரிடம் விசாரித்தில் அவர்களுக்கு தெரியவில்லை. எனவே இதுகுறித்து மதுரை செல்லூர் காவல் நிலையத்தில் முத்துலட்சுமி புகார் தெரிவித்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தம்பதிகள் வசித்து வரும் வீட்டின் உரிமையாரான சுந்தரி (வயது 36) என்பவர் தம்பதிகள் திருமண நிகழ்ச்சிக்கு சென்றதை பயன்படுத்தி பீரோவில் இருந்த 10 சவரன் தங்க நகையை தனது வீட்டில் பதுக்கி இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து சுந்தரியை கைது செய்த செல்லூர் போலீசார் அவரிடமிருந்து 10 சவரன் தங்கநகைகளை கைப்பற்றி பின்னர் சிறையில் அடைத்தனர்.

Views: - 251

0

0