அண்ணா, பெரியார் பெயரை சொல்லி எத்தனை நாள் மக்களை ஏமாத்த போறீங்க : தங்கர் பச்சான் ஆவேசம்!

Author: Udayachandran RadhaKrishnan
6 June 2024, 6:55 pm

கடலூர் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,தேர்தல் பிரச்சாரத்திற்கு மக்களை சந்திக்க 22 நாட்கள் மட்டுமே கிடைத்தது,முழு காய்ச்சலுடன் மக்களை சந்தித்தேன், கடலூர் மாவட்டத்தின் தீராத பிரச்சினைகளை தீர்க்கவே தேர்தல் களம் கண்டு தேர்தலில் 2 லட்சம் வாக்குகள் பெற்றேன்.

என்னை நம்பி வாக்களித்து மக்களுக்கு நன்றி என்றார்.அதிகாரம் இருந்ததால் தான் மக்களுக்கு நன்மை செய்ய முடியும் இத்துடன்‌ என் அரசியல் களம் நிற்காது என தெரிவித்தார்.

கடந்த முறை 38 பேரால் நாட்டுக்கு கிடைத்தது என்ன? உங்கள் தொகுதியின் எம்பி என்ன செய்தார்? மீண்டும் அவர்களே வந்தால் என்ன செய்வீர். உங்களுக்கு அரசியல் விடுதலை எப்படி கிடைக்கும் என‌ தெரிவித்தார்.அரசியல் புரிதல் மக்களுக்கு இல்லாததே காரணம் என கடுமையாக சாடினார்.

அண்ணாவையும்,பெரியாரையும் இன்னும் எவ்வளவு நாட்கள் சொல்லி ஏமாற்றுவார்கள் என‌ கடிந்து கொண்ட அவர்,அடுத்த 5 ஆண்டுகள் மக்கள் இன்னல்களை சந்திப்பீர்‌ என‌ காட்டமாக தெரிவித்தார்.

மேலும் படிக்க: போலி கருத்துக்கணிப்புகளை திணித்து பங்குச்சந்தைகளில் ஊழல் : பாஜக மீது ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு!

மத்திய அரசும் மாநில அரசும் இணக்கமாக இருந்தால் தான் தமிழகத்திற்கு நன்மை எனக் கூறிய அவர்,என் மொழி, மண், இனத்திற்கு எந்த சிக்கல் வந்தாலும் தங்கர் பச்சான் போராடுவேன் என தங்கர் பச்சான் தெரிவித்தார்.

  • Popular Unmarried Actress Pregnant Photos Goes Viral திருமணம் ஆகாமலேயே விஜய் பட நடிகை கர்ப்பம்… வைலராகும் போட்டோஸ்!!